About Tamil Department
Department of Tamil
1990 – ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் பொதுத்தமிழ் (Part- I Paper) பாடப்பிரிவில் மட்டும் தமிழ்மாணவிகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.
2016 – ஆம் ஆண்டு இளங்கலைத்தமிழிலக்கியப் பாடப்பிரிவு தொடங்கப்பட்டு சீரும் சிறப்புமாகச் செயல்பட்டு இயங்கி வருகின்றது. தமிழ்த்துறையில் 125 மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மாணவிகளிடையே பண்பாடு கலாச்சாரம் மற்றும் படைபாக்கத் திறனைவளர்க்கும் பொருட்டுப் பயிலரங்கம் உரையரங்கம் சிறப்புரைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளைத் தமிழ்த்துறை நிகழ்த்தி வருகின்றது. தமிழ்மொழிக்குச் சிறப்புச்சேர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ்மொழிஉணர்வும் பற்றும் உடைய மாணவிகளை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்த்துறைச் செவ்வனே செயல்பட்டு வருகின்றது.